Ads

Search This Blog

Powered by Blogger.

Blog Archive

History Quiz 001

All The Questions Given Here For Your Preparation To Various Exams Such As Tamil Nadu Public Service Commission All Group Exams, Village A...

TNPSC BIOLOGY MODEL QUESTION 17-04-2020 DOWNLOAD

Leave a Comment


TNPSC BIOLOGY MODEL QUESTION 17-04-2020 DOWNLOAD

TNPSC BIOLOGY MODEL QUESTION 17-04-2020 DOWNLOAD
1.எதனால் AB வகை இரத்தம் அனைவரிடமும் பெறுவோராக திகழ்கிறது
A) A மற்றும் B ஆகிய இரண்டும் ஆன்டிஜன்களும் RBC-ல் இருப்பதாலும், பிளாஸ்மாவில் ஆன்டிபாடிகள் இல்லாததாலும்
B) பிளாஸ்மாவில் A மற்றும் B ஆன்டிபாடிகள் காணப்படுவதால்
C) RBC மற்றும் பிளாஸ்மாவில் A மற்றும் B ஆன்டிஜென்கள் இல்லாததால்
D) பிளாஸ்மாவில் A மற்றும் B ஆன்டிஜென் காணப்பட்டு, ஆன்டிபாடிகள் இல்லாததால்


A) A மற்றும் B ஆகிய இரண்டும் ஆன்டிஜன்களும் RBC-ல் இருப்பதாலும், பிளாஸ்மாவில் ஆன்டிபாடிகள் இல்லாததாலும்.
*விளக்கம் : : இரத்த வகைகள் கார்ல் லேண்ட்ஸ்டீ னர் எனும் அறிவியல் அறிஞர் ABO எனும் மனித இரத்த வகைகளைக் கண்டறிந்தார்.
*மனித இரத்தம் A, B, AB மற்றும் 0 எனும் நான்கு வகைகளைக் கொண்டது.
* A வகை இரத்தத்தில் A ஆன்டிஜெனும் B வகை இரத்தத்தில் B அன்டிஜெனும் உள்ளன.
*ஆன்டிஜென்களுடன் தொடர்புடைய எதிர்பொருட்கள் (ஆன்டிபாடிகள்) சீரம் எனும் இரத்தப்பகுதியில் காணப்படுகின்றன.
*ஒரு மனிதனின் இரத்தத்தில் காணப்படாத குறிப்பிட்ட ஒரு ஆன்டிஜெனுக்கான எதிர்ப்பொருளே அந்த இரத்தத்தில் உருவாகிறது.
இவ்வட்டணையின் படி “AB” வகை அனைவரிடமும் பெறுவோராகவும் “0”வகை அனைவருக்கும் வழங்குவோராகவும் திகழ்கிறது.

இரத்த வகை RBC – யில் காணப்படும் ஆன்டிஜன் பிளாஸ்மாவில் காணப்படும் ஆன்டிபாடிகள் கொடையாளி-ன் இரத்த வகை
A A Anti –B A, O
B B Anti – A B , O
AB AB NIL AB, A, B, O
O NIL ANTI— A , B 0

2.ஆண்களில் இரண்டாம் நிலை பால் பண்புகள் தோன்ற காரணமான ஹார்மோன்
A) FSH
B) ஆண்ட்ரோஜன் பிணைப்பு புரதம்
C) டெஸ்டோஸ்டீரான்
D) ICSH

C) டெஸ்டோஸ்டீரான்
விளக்கம் : :
FSH மற்றும் LH தூண்டுதலால் ஆண் இன உறுப்புகளின் முதிர்ச்சியை டெஸ்டோஸ்டீரோன் துவக்குகின்றது. மேலும், இரண்டாம் நிலை பால்பண்புகளின் வளர்ச்சி, தசை வளர்ச்சி, முகம் மற்றும் அக்குள் பகுதயில் ரோம வளர்ச்சி, ஆண் குரல் மற்றும் ஆணின் பாலிய நடத்தைகள் ஆகியனவற்றை டெஸ்டோஸ்டீரான் உருவாக்குகின்றது. இது உடலின் ஒட்டு மொத்த எலும்புகளின் எடையைக் கூட்டுவதுடன் விந்தணுவாக்கத்தையும் துண்டுகின்றது.
* இது ஸ்டீராய்டு வகையை சார்ந்தது (கொலஸ்டீராலின் வழிப்பொருட்களாகும்) வகை லீடிக் செல்களால் சுரக்கப்படுகிறது. – விந்தகத்தில் உள்ள இடையீட்டு செல்களைத் தூண்டிவிடுகிறது
* ஆண் இனப்பெருக்க உறுப்புகளின் கருவியல் வளர்ச்சிக்கு காரணமாகிறது இரண்டாம் பால் பண்புகளுக்கு காரணமாகிறது.
3.1._- என்பது உயிர் வாழும் இருவாழ்விகள் அல்ல.
2. கீழே கொடுக்கப்பட்டவற்றில் எது இரு பால் உயிரி அல்ல.
A) சைபனாப்ஸ், அட்டைகள்
B) எரியோப்ஸ், தட்டை புழுக்கள்
C) ஹையுனோபியஸ், மண்புழுக்கள்
D) டிரிடான், பாலிகீட்டோக்கள்

D) டிரிடான், பாலிகீட்டோக்கள்
4.உச்சகட்ட தட்ப வெப்பநிலை மாறுதலுக்கு மரங்கள் தாக்குப்பிடித்து வாழக்காரணம்?
A) அகன்ற கடினப்பரப்புடைய இலைகள்
B) இலையின் மேலோட்டமாகக் காணப்படும் இலைத் துளை
C) தடினமான கியூட்டிக்கிள்
D) வெஸல்கள் காணப்படுவது

C) தடினமான கியூட்டிக்கிள்
விளக்கம் : : கோனிஃபர்கள் அதீத சூழ்நிலையை தாக்குப்பிடித்து வாழ, ஊசி போன்ற இலைகள், தடிமனானகியூட்டிகிள் , அமிழ்ந்த இலைத்துளைகள் ஆகிய வறட்சியை (நீரின் பற்றாக்குறை) தாங்கிக் கொள்ளும் தக அமைப்புகளை பெற்றிருக்கின்றன.
TNPSC BIOLOGY MODEL QUESTION 17-04-2020 DOWNLOAD
5.பின்வருவனவற்றுள் எந்த கூற்று தவறானது?
A) யூ ஃபாக்டீரியாக்கள் போலி பாக்டீரியாக்களாகும்
B) குடல் பகுதி பூஞ்சைகள் பாசி பூஞ்சை என அழைக்கப்படுகிறது
C) சயனோ ஃபாக்டீரியா நீலப்பச்சை பாசிகள் என அழைக்கப்படுகிறது
D) கோல்டன் ஆல்கா டெஸ்மிடுகள் எனப்படும்

A) யூபாக்டீரியாக்கள் போலி பாக்டீரியாக்களாகும்
விளக்கம் : : பாக்டீரியா உண்மையான பாக்டீரியா ஆகும். மற்ற கூற்றுகள் அனைத்தும் சரி,
6.காலணி ஆல்காவுக்கு இது எடுத்துக்காட்டு
A) யூலோத்ரிக்ஸ்
B) ஸ்பைரோகைரா
C) குளோரெல்லா
D) வால்வாக்ஸ்

D) வால்வாக்ஸ்
விளக்கம் : : ஆல்காக்களின், குளோரோஃபைசி வகுப்பைச் சேர்ந்த வால்வாக்ஸ் காலணியாக உள்ளன. குளோரெல்லாவில், அதிக அளவு புரதச் சத்து மற்றும் இதரத் தேவையான சத்துக்களும் இருப்பதினால், அது உணவின் முக்கிய ஆதாரமாக உள்ளது. குளோரெல்லா உலர வைக்கப்படும்போது, அதில் 45% புரதமும், 20% கொழுப்பும், 20% கார்போஹைட்ரைடும், 5% நார் சத்தும், 10% கனிமங்களும் மற்றும் வைட்டமின்களும் உள்ளன. மற்றொரு மிகச் சிறந்த உணவு (உணவுச் சத்து செறிந்தது) ஸ்பைருலினா ஆகும். (விண்ளிெப் பயணிகளால் உபயோகிக்கப்படுகிறது.
7.மறுசேர்க்கை தொழில் நுட்பத்தால் உருவாக்கப்பட்ட முதல் மனித ஹார்மோன்
A) இன்சுலின்
B) ஈஸ்ட்ர ஜன்
C) தைராக்ஸின்
D) புரோஜெஸ்ட்ரான்

A) இன்சுலின்
விளக்கம் : : இன்சுலின் (சுருக்கமாக)
பகுதி 1; மறுசேர்க்கை தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட முதல் மனித ஹார்மோன் இன்சுலின்.
இந்த ஹார்மோன் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. இந்த ஹார்மோன் இரண்டு விதமான கூட்டு புரதங்களால் ஆனது.
மறுசேர்க்கை தொழில்நுட்பத்திற்கு முன்பாக இந்த ஹார்மோன் விலங்கிலிருந்து எடுக்கப் பட்டு மனிதனுக்கு பயன்படுத்தப் பட்டது.
ஆனால் தற்போது மறுசேர்க்கை தொழில்நுட்பத்தால் இந்த ஹார்மோன் உற்பத்தி செய்யப்படுகிறது.
பகுதி 2:|
லாங்கர்ஹான் திட்டுகள் இன்சுலின் என்ற பெப்டைடு ஹார்மோனை சுரக்கிறது.
இது உடல் செல்களான (ஹிப்படோ சைட்) தசைகள் (அடிப்போ சைட்டுகள்) ஆகிய கல்லீரல் செல்கள் குளுக்கோஸை எடுத்துக் கொள்வதை தூண்டுகிறது.
அதனால் இரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது. .

8.மைட்டோகாண்டிரியா மற்றும் பசுங்கணிகம் இவையிரண்டும்
1. பாதி தற்சார்பு நுண்ணுறுப்புகள்
2. அவை முன்னாலுள்ள நுண்ணுறுப்புகளிலிருந்து பிரிதலால் உருவானவை. அதில் DNA உள்ளது. ஆனால் புரதம் தயாரிப்பதற்கான அமைப்புகள் இல்லை .
பின்வருவனவற்றுள் எது சரியானது?
A) (1) சரியானது (2) தவறானது
B) (1) மற்றும் (2) தவறானது
C) (1) மற்றும் (2) சரியானது
D) (2) சரியானது (1) தவறானது


(1) சரியானது (2) தவறானது
விளக்கம் : : மைட்டோகாண்டிரியா மற்றும் பசுங்கணிகம் பாதி தானாகவே இயங்கும் செல்நுண்ணுறுப்புகள் ஆகும்.
அவைகள் தங்களுடைய சொந்த DNA உதவியுடன் IMRNA, tRNA மற்றும் rRNA ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன – அவற்றில் சொந்த ரிபோசோம்கள் காணப்படுவதால் அவை ஒரளவு புரதத்தை உற்பத்தி செய்கின்றன.
9.கரப்பான் பூச்சி ஒரு
A) பகல் பிராணி மற்றும் தாவர உண்ணி
B) இரவுப்பிராணி மற்றும் அனைத்துண்ணி
C) பகல் பிராணி மற்றும் விலங்கு உண்ணி
D) இரவுப் பிராணி மற்றம் தாவர உண்ணி

B) இரவுப் பிராணி மற்றும் அனைத்துண்ணி
விளக்கம் : : கரப்பான் பூச்சி (பெரிபிளானேட்டா அமெரிக்கானா) இரவில் எதையும் உண்ணக்கூடிய அனைத்துண்ணிகள் ஆகும்.
* கரப்பான்பூச்சியில் திறந்த வகை இரத்த ஓட்டம் காணப்படுகிறது. கரப்பான் பூச்சி டிரக்கியா எனப்படும் சுவாச குழல்கள் மூலம் சுவாசிக்கின்றன.
மால்பிஜியன் குழல்கள் இரத்தத்திலிருந்து கழிவுப் பொருள்களை பிரித்துக் குடல் வழியாக வெளியேத் தள்ளுகிறது.
நரம்பு மண்டலம் உடம்பு முழுவதும் பரவி காணப்படுகிறது.
* கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியை துண்டித்த பின்னரும் ஒரு வாரம் வரை உயிருடன் இருக்கும்.
TNPSC BIOLOGY MODEL QUESTION 17-04-2020 DOWNLOAD
10.ஒரு உயிரியலாளர் எலிகளைப் பற்றிய ஆய்வை , ஒரு கொட்டகையில் மேற்கொண்டார். அதில் சராசரியாக 250 பிறந்தன. 240 இறந்தன. 20 வெளியே இருந்து உள்ளே வந்தன. 30 உள்ளேயிருந்து வெளியே சென்றன என்றால் நிகர எலிகளின் தொகை என்ன
A) 05
B) சுழியம்
C) 15
D) 15

B) சுழியம்
விளக்கம் : : இந்தக் கேள்வியில் மொத்த மக்கள் தொகை அதிகரிப்பு என்பது பிறப்பு + குடியேற்றம் = 250 + 20 = 270 மொத்த மக்கள் தொகை குறைப்பு என்பது மார்டாலிட்டி + இறப்பு + புலம்பெயர்தல் = 240 + 30 = 270 எனவே மொத்த மக்கள் தொகை அதிகரிப்பு = 270 – 270 =0.
11.இயற்கையாக பாஸ்பரஸ் அதிகமாய் தேங்கியிருக்கும் இடம்
A) பாறை
B) கடல்நீர்
C) தொல்லுயிர் படிமங்கள்
D) விலங்குகளின் எலும்புகள்

A) பாறை
விளக்கம் : : இயற்கையாக பாஸ்பரஸ் பாஸ்பேட் பாறைகளில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். ஏனெனில் சுழற்சி தான் நில சூழ்நிலை மண்டலத்தின் மண்ணாகவும் நீர் வாழிடத்தில் நீராகவும் அமைகிறது.
குறைந்த அளவு பாஸ்பேட் எப்பொழுதும் இந்த சுழற்சியினால் பாறைகளிலிருந்து பாஸ்பரஸ் கிடைக்கிறது. பாஸ்பேட் எப்பொழுதும் கால்சியம், இரும்பு, அலுமினியத்துடன் இணைந்தே காணப்படும்.
வளிமண்டலம் அல்லது வாயு சுழற்சி பாஸ்பரஸ் மண்டலத்தில் சுழற்சியடைந்து லித்தோஸ்பியரிலும் (பாறை மண்டலம்) ஹைட்ரோஸ் பியரிலும் (நீர்க்கோளம்) உள்ளது.

12.சூழ்நிலை மண்டலம் (Eco System) என்ற சொல்லை உருவாக்கியவர் யார்?
A) E. ஹெக்கேல்
B) E.வார்மிங்
C) E. P. ஒடம்
D) A.G டான்சிலே

D) A.G டான்சிலே
விளக்கம் : : சூழ்நிலை மண்டலம் A.G டான்சிலே என்பவரால் 1935 பெயரிடப்பட்டது.

13.செல்லினுள் உள்ள தற்கொலை பைகள் உடைந்தால் அந்த செல்லின் நிலை எவ்வாறு இருக்கும்?
A) செல் இறந்து போகும்
B) செல் உப்பி காணப்படும்
C) செல் சுருங்கி காணப்படும்
D) எதுவும் நடப்பதில்லை .


A) செல் இறந்து போகும்
விளக்கம் : : லைசோசோம்களை கிரிஸ்டியன் டி டுவி (1953) கண்டறிந்தார்.
இவை தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நுண்ணுறுப்பு என்றும் அழைக்கப்படுகிறது.
இவை கோள வடிவம் கொண்டு ஒற்றைச் சவ்வால் ஆன அமைப்புகளாக யூகேரியாட்டிக் செல்களில் காணப்படுகின்றன.
கோல்கை உடலத்தின் முனை சிறு பைகளாகப் பிதுக்கப்பட்டு வெளியேறும் சிறிய வாக்குவோல்கள் லைசோசோம்களாக உருவாகின்றன.
லைசோசோம்மன் பணிகள் :
* செல்லிற்குள்ளே செரித்தல் சைட்டோபிளாசத்தில் காணப்படும் கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் லிப்பிடுகளைச் செரித்தல்.
சுய அழிவு (Authophagy) : சில சாதகமற்ற சூழ்நிலையில் தன்னுடைய செல் நுண்ணுறுப்புகளான மைட்டோகாண்டியங்கள் மற்றும் எண்டோபிளாச வலை போன்றவற்றைச் செரிக்க செய்தல்.
சுயச்சிதைவு (Autolysis) : நோயுற்ற செல்களைச் சிதைத்துச் செல் அழிவை ஏற்படுத்துதல்.
முதுமையடைதல் (Ageing) : செல்லின் உட்புறத்தில் காணப்படும் மூலக்கூறுகளைச் சுயச் சிதைவைச் செய்யும் நொதிகளைப் பெற்றிருத்தல்.
உள் விழுங்குதல் செயல் (Phagocytosis) : பெரிய செல்கள் அல்லது உட்பொருட்களைப் ஃபேகோசைட்டோசிஸ் உள்விழுங்கி செரித்துப் ஃபேக்கோசோம்மை சைட்டோபிளாசத்தினுள் உருவாக்குகிறது. இந்தப் ஃ பேக்கோசோமானது லைசோசோமுடன் இணைந்து செரித்தலில் பங்கு கொள்கிறது.
புறத்தன்மை (Exocytosis): லைசோசோம்களின் நொதிகள் செல்லிருந்து வெளியேற்றப்பட்டுச் செல்லின் வெளியில் உள்ள மற்ற செல்களைச் சிதைவடைய செய்தல்.
14. வகைப்பாட்டியலில் இறங்கு வரிசை என்பது
A) உலகம் – வரிசை – வகுப்பு – பிரிவு – பேரினம் – சிற்றினம்
B) உலகம் – தொகுதி – வரிசை — வகுப்பு – சிற்றினம் + பேரினம்
C) உலகம் – தொகுதி – வரிசை — வகுப்பு – பேரினம் – சிற்றினம்
D) உலகம் – தொகுதி – வகுப்பு – வரிசை – பேரினம் – சிற்றினம்


D) உலகம் – தொகுதி – வகுப்பு – வரிகை – பேரினம் – சிற்றினம்.
உலகம் (Kingdom) – தொகுதி (Phylum) – வகுப்பு (Class) – வரிசை (Order) – பேரினம் (Genus) – சிற்றினம் (Species)
ShortCut : King Prefered Cola Order (Flavour) Grape Soda
15.கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை கவனிக்க.
1. இரத்தமானது நுரையீரலில் இருந்து இடது எட்ரியம் வழியாக சென்று இடது வென்டிரிக்களை அடைந்து பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்கிறது.
2.உடலில் இருந்து பெறப்பட்ட இரத்தமானது வலது ஏட்ரியம் வழியாக சென்று வலது வென்டிரிக்களை அடைந்து பின்னர் நுரையீரலுக்கு செல்கிறது.
3. உடலில் இருந்து பெறப்பட்ட இரத்தமானது இடது ஏட்ரியம் வழியாக சென்று வலது வென்டிரிக்களை அடைந்து பின்னர் நுரையீரலுக்கு செல்கிறது
கீழே கொடுக்கப்பட்ட வாக்கியங்களில் எது , எவை சரியானவை.
A) 1 மட்டும்
B) 1 மற்றும் 2
C) 2 மற்றும் 3
D) 1, 2 மற்றும் 3

B) 1 மற்றும் 2

TNPSC BIOLOGY MODEL QUESTION 17-04-2020 DOWNLOAD
16.பின்வருவனவற்றுள் உயிர்தோன்றலுக்கு மிக இன்றியமையாதது எது
A) மாவுப்பொருட்கள்
B) புரதங்கள்
C) கொழுப்பு பொருட்கள்
D) நியூக்ளிக் அமிலங்கள்

D) நியூக்ளிக் அமிலங்கள்
விளக்கம் : : மற்றும் என்பவை இரு வகை நியூக்ளிக் அமிலங்கள் ஆகும்.
இவை ஆரம்பத்தில் செல்லின் நியூக்கிளியஸிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டன.
செல்கள் மற்றும் வைரஸ்களில் காணப்படுவதோடு அவற்றின் மரபு வெளிப்பாட்டிற்கான மரபுத் திட்டங்களையும் கொண்டுள்ளன.

TNPSC BIOLOGY MODEL QUESTION 17-04-2020 DOWNLOAD


Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

Blogger Templates By Templatezy & Copy Blogger Themes